அரசியல் தமிழகம்

அமமுக அமைதியாக இருப்பது ஏன்.? பசும்பொன்னில் ஓப்பனாக பேசிய டி.டி.வி.தினகரன்.!

Summary:

கொரோனா காரணமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் செய்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என வாழ்ந்த தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர்  நினைவிடத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக இந்த ஆறு மாத காலமாக அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், அமமுக நிர்வாகிகளிடம், கொரோனாவால் நமக்கும், பிறருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் கூட்டங்கள் சேர்க்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.


Advertisement