அரசியல் தமிழகம்

தமிழகம் தள்ளாடுகிறது.! வெற்றி நடைபோடவில்லை!. பரபரப்பாக பேசிய டிடிவி தினகரன்.!

Summary:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை தாம்பரம் சண்முக சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், இந்த இயக்கத்தின் தொடக்கம் இந்த கூட்டத்தின் தொடக்கம்தான். 

தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலே அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே உருவாக்க கூடிய கூட்டம் இங்கே கூடி இருக்கின்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்க ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும் தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

கொரோனா சமயத்தில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றும், பல கோடி கடன் வாங்கியதாகவும் நிதிநிலை அறிக்கையில் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். தமிழகம் கடனில் தள்ளாடுகிறது. வெற்றிநடை போடவில்லை. தாம்பரத்தில் மேம்பாலத்தால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது, என வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். தாம்பரம் மேம்பால வடிவமைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 


Advertisement