அரசியல் தமிழகம்

கல்லூரி மாணவர்களுக்கும் ஆல்பாஸ் போடுங்க! மாணவர்களுக்காக டிடிவி தினகரனின் கோரிக்கை!

Summary:

Ttv dhinakaran request for college students

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பல்கலைகழகங்கள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு  வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பது சரியானது அல்ல. 


ஏற்கனவே இது தொடர்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள  நடவடிக்கையைச்  சுட்டிக் காட்டிய பிறகும் தமிழக அரசு முடிவெடுக்க முடியாமல்  தடுமாறுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. 

எனவே,கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் போல இதிலும் கடைசி வரை அரசு  குழப்பிக் கொண்டே இருக்காமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement