அமமுகவில் இருந்து முக்கிய புள்ளி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி!

அமமுகவில் இருந்து முக்கிய புள்ளி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி!



ttv-dhinakaran-party


அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவா் தற்போது அமமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டள்ளாா். 

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியைத் தொடா்ந்து அண்மை காலமாக அமமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் ஒவ்வொருவராக விலகி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். யார் கட்சியில் இருந்து சென்றாலும் மிகவும் நிதானமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன். அவர் கூறும் ஒரே வார்த்தை யார் வேண்டுமானாலும் போகட்டும் தொண்டர்களுக்காவும், மக்களுக்காகவும் மட்டுமே இந்த கட்சி செயல்படும் என கூறுகிறார்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமாக விளங்கியவா் வி.பி.கலைராஜன். பின்னா் இவரது செயல்பாடுகளால் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டாா். 

TTV

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னா் வி.பி.கலைராஜன் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டாா். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பின் ஓ.பன்னீா் செல்வம் அணியில் இருந்த கலைராஜன் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன் அணிக்கு நெருக்கமாக இருந்தாா். இதனையடுத்து தென்சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் தென் சென்னையின் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்துவந்த வி.பி.கலைராஜன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் அதனால் அவரை கட்சியிலிருந்து, அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.