அரசியல் தமிழகம்

தமிழகம் வந்த பிரதமர் மோடி.! கறுப்புக்கொடி காட்டியவர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்தநிலையில் அனைத்து கட்ச

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்தநிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தடைந்தார்.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி . அங்கு அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு அளித்தனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்புக்கொடி காட்டி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement