திருமணமாகி நான்கு ஆண்டுகள்.. ஒன்றரை வயது குழந்தையுடன் தாயார் எடுத்த விபரீத முடிவு.!

திருமணமாகி நான்கு ஆண்டுகள்.. ஒன்றரை வயது குழந்தையுடன் தாயார் எடுத்த விபரீத முடிவு.!


trichy-young-pregnant-mother-sets-fire-on-herself

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். வேல்முருகனுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. 

இந்நிலையில் இத்தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் கமலேஷ் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் ரஞ்சனா 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஒரு நாள் வேல்முருகன் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் ரஞ்சனா வேல்முருகனின் குடும்பத்தினருடன் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சனா குளியலறைக்கு தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சென்ற சில நிமிடத்திலேயே பயங்கரமான அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து குடும்பத்தினர் ஓடி சென்று பார்த்த போது குளியலறையில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ரஞ்சனா தீக்குளித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து 
வழக்குப்பதிவு செய்து உப்பிலியபுரம் போலீசார், விசாரிப்பதுடன், வரதட்சணை பிரச்சனை காரணமாக, ரஞ்சனா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, முசிறி, சப் - கலெக்டர் ஜோதிசர்மாவும் விசாரித்து வருகிறார்.