மயான நில அபகரிப்பு புகார்.. அப்பாவி கொலை.. திமுக, த.மா.கா பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு..!!Trichy Man Murder by Strangers DMK and TMC Party Supporters Name Filed FIR

சுடுகாடு நில ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்த ஊராட்சி தலைவரின் நண்பர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராஜிவ் காந்தி நகர், செங்கதிர்சோலை மயான பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபர்களின் பெயரை பட்டியலிட்டு, மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சிவகுமார் திருச்சியில் உள்ள செங்கதிர்சோலையபுரம் பகுதியை சார்ந்தவர் ஆவார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் தரப்பு புகாரால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பு, கடந்த சில நாட்களாகவே சிவகுமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், மர்ம நபர்களால் சிவா வீட்டிற்கு செல்கையில் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

trichy

படுகாயமடைந்த சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சிவகுமாரின் மனைவி மைதிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகர், வாசன் எஸ்டேட் தொழில் அதிபர் ரவி முருகையா, திமுக ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், பிரபாகரன், தீபக் ஆகிய 4 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.