ஐயா., பெத்தவங்கட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க - காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.!

ஐயா., பெத்தவங்கட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க - காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.!


Trichy Dharmapuri Couple Love Marriage Complaint Musiri Police Station

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, சூரம்பட்டி பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விஜயராஜ் (வயது 27). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டி பகுதியை சார்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் சந்தியா (வயது 20). 

விஜயராஜுக்கும் - சந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ முடிவெடுத்துள்ளனர். 

trichy

காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட நிலையில், விஜயராஜ் சூரம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சந்தியாவை அழைத்து சென்றுள்ளார். 

இதற்குள்ளாக, சந்தியாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று கூறி பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள. சந்தியாவோ தனது காதல் கணவருடன் சேர்ந்து பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

இதனையடுத்து, காதல் ஜோடிகளிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்ட முசிறி காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.