திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து... கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி.!trichy-chennai-national-highway-tragic-accident-kills-f

சென்னையை அடுத்த பொத்தேரியில் டிப்பர் லாரி மோதியதில் நான்கு பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டை அடுத்த புத்தேரி அருகே உள்ள மறைமலை நகரில் எம் சாண்ட் ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலையின் தடுப்புச் சுவர் மற்றும் சிக்னல் ஆகியவற்றை  இடித்து சாலையை கடப்பதற்காக நின்ற இரு சக்கர வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

tamilnaduஇந்தக் கொடூர விபத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் பயோ கெமிஸ்ட்ரி படித்து வந்த மாணவரான கார்த்தி மற்றும் பி.காம் மாணவர் ஜஸ்வந்த் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பார்த்தசாரதி என்ற நபரும் பவானி என்ற பெண்மணியும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.