தீபாவளிக்கு தயாராகும் தமிழக போக்குவரத்து கழகம்; நெரிசலை சமாளிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய திட்டம்!!

தீபாவளிக்கு தயாராகும் தமிழக போக்குவரத்து கழகம்; நெரிசலை சமாளிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய திட்டம்!!



transport-plan-for-deepawali

சென்னையில் வாழும் 90 சதவிகித மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். இந்த உண்மை தமிழகத்தில் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தான் தெரியும். அந்த சமயங்களில் சென்னை வெறிச்சோடி காணப்படும். உணவகங்களில் சாப்பிட கூட உணவு கிடைக்காது. திரையரங்குகள் அனைத்தும் காலியாக இருக்கும்.

இதற்கு காரணம் சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் அனைவரும் பண்டிகைகளை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால் தான். இந்த பண்டிகை காலங்களில் விற்பனையாகும் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் படித்தவர்களால் உடனே கலியாக்கப்பட்டுவிடும்.

transport plan for Deewalli

சாமானிய மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு தான் செல்ல வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பண்டிகை நாட்களுக்கு முதல் நாள் மாலையில் இருந்தே சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துவிடும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகரத்தை விட்டு வெளியேற கிட்டத்தட்ட 5, 6 மணி நேரங்கள் ஆகிவிடும்.

சில சமயங்களில் ஊருக்கே போக வேண்டாம் என்ற எண்ணம் கூட தோன்றும். இருந்தாலும் நமது குடும்பத்தினர் நமக்காக காத்திருப்பார்கள் என்பதால் போய்தான் ஆகா வேண்டும் என்று மனதை தேற்றிக்கொள்வோம்.

இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒவொரு பண்டிகைக்கும் அரசு புது புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம்.

transport plan for Deewalli

அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். அவைகள் பின்வருமாறு:

1 . தீபாவளி பண்டிகைக்கு 22,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
2 . சென்னையில் இருந்து நவ.3,4,5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும்
3 . சென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

எனவே மக்கள் அனைவரும்  இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் ஊர்களுக்கு செல்ல இப்போதே தகுந்த தயாரிப்புகளை செய்து கொள்ளுமாறு Tamilspark மூலம் கேட்டுக்கொள்கிறோம்.