தமிழகம்

சீனாவை மிஞ்சிய தமிழக அரசின் வினோத திட்டம்.! ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாறப்போவது எப்படி..!

Summary:

Train transfer as hospital for corona patients

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க 12 நாட்களில் புதிதாக மருத்துவமனையை உருவாக்கியது அந்நாட்டு அரசு. தற்போது அதற்கும் ஒரு படி மேலாக தமிழகத்தில் ரயில் பெட்டிகள் தனி வார்டுகளாக உருவாகி வருகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை அளிக்க போதிய வசதிகளை ஏற்ப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்ற முடிவு செய்ய உள்ளதாக ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதாவது ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மாற்றங்களை கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

அதாவது ஒன்பது கேபின்கள் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முதலில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு கேபினுக்கு இரண்டு நோயாளிகள் என சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே பெட்டியில் உள்ள இரண்டு பக்க கதவுகளின் அருகில் இருக்கும் மறைப்பு பலகையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய பாணியிலான டாய்லெட்டை அகற்றி விட்டு அதில் குளியலறைகளாக மாற்ற உள்ளனர். கை கழுவுவதற்கு ஏதுவான வசதிகளை செய்து அங்கு வாளி, குவளை, சோப் போன்றவை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்டியின் நடுவே உள்ள படுக்கை மற்றும் மேலே ஏறுவதற்காக இருக்கும் கம்பி போன்றவை நீக்கப்படும். மருத்துவ பொருட்களை வைப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படும். நோயாளிகளை தனிமைப்படுத்த இரண்டு படுக்கைக்கும் நடுவே பிளாஸ்டிக் திரைச்சீலை வைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. 


Advertisement