#Video: நடுவழியில் பசுமாடு., இரயில் ஓட்டுனரின் மனிதாபிமான செயல்.. குவியும் பாராட்டுக்கள்..!

#Video: நடுவழியில் பசுமாடு., இரயில் ஓட்டுனரின் மனிதாபிமான செயல்.. குவியும் பாராட்டுக்கள்..!


train-pilot-saves-cow-life

நமது வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு மாடு, பசு போன்றவை மேய்ச்சலுக்காக வயல்வெளிகள் மற்றும் பசுமையான நிலப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இன்றுள்ள காலகட்டத்தில் அதனை சாலைகள் வழியாக கொண்டு செல்லும் நிலையில், சில இடங்களில் இடையே இரயில் தண்டவாளமும் செல்லும். இவ்வாறான இடங்களில் பசுக்களை உரிமையாளர்கள் அழைத்து செல்லும் வேலையில் சிலர் அலட்சியமாக மேய்ச்சலுக்கு விடுவது இயல்பு. 

இவ்வாறான அலட்சியம் பசுக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த நிலையில், இரயில்வே தண்டவாளம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இரயில் பாதை வழியே மேய்ந்து சென்று  கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியில் இரயில் ஒன்று வந்தது. முதலில் இருந்த மாடு இரயில் சத்தத்தை கேட்டு ஒதுங்கி கொள்கிறது. 

அதைத்தொடர்ந்து, மற்றொரு பசு மாடு எங்கு செல்வது என்பது தெரியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில், சுதாரித்த இரயில் ஓட்டுனர் இரயிலை அவசர கதியில் விரைந்து நிறுத்துகிறார். மேலும், அப்போது இரயில் ஒலியையும் எழுப்பிய நிலையில் பசுமாடு உயிருடன் தப்பிக்கிறது. இந்த செயலைச் செய்த ஓட்டுனருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் ஆகி வருகிறது.

Watch Video: https://www.facebook.com/reel/1134357667428225?fs=e&s=cl