#JUSTIN சென்னை - பெங்களூரு ஏசி டபுள் டக்கர் ரயிலில் திடீர் புகை.!! மக்கள் பீதி..!!

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் இருந்து திடீரென புகைவந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏசி டபுள் டக்கர் ரயிலில் மக்கள் வழக்கம் போல் பயணம் மேற்கொண்டு இருந்தனர். ரயில் குடியாத்தம் அருகே சென்று கொண்டிருக்கும்போது c6 பெட்டியில் பிரேக் பைண்டிங் ஆனதால், புகை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென டபுள் டக்கர் ரயிலிலிருந்து புகை வந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பதற்றத்துடன் ரயிலில் இருந்து இறங்கி உள்ளன. மேலும், புகையை நிறுத்தவும், பிரேக் பைண்டிங்கை சரி செய்யவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
மேலும், இந்தியாவில் சமீப காலமாக ரயில் சம்பந்தமான புகார்கள் ஏறி கொண்டே போகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
#JUSTIN சென்னை - பெங்களூரு ஏசி டபுள் டக்கர் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு #Chennai #Bengaluru #Train #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Oay9jFZZm5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 13, 2023