பண்ருட்டி அருகே சோகம்.. டிராக்டர் டயரில் சிக்கி 2 பெண்கள் பலி..!

பண்ருட்டி அருகே சோகம்.. டிராக்டர் டயரில் சிக்கி 2 பெண்கள் பலி..!


Tragedy near Panruti.. 2 women get stuck in tractor tire..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தாட்சாயினி மற்றும் ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் 100 நாள் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு உள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் குச்சிபாளையம் அருகே சென்றபோது கரும்பு லோடு ஏற்றுக் கொண்டு வந்த டிராக்டர் ஒன்று அவர்கள் மீது அதிவேகமாக மோதி உள்ளது. இந்த விபத்தில் தாட்சாயினி மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் டிராக்டரின் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

accident

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.