இனி யாரும் வண்டி ஓசி கொடுக்க முடியாது! புதிய நடவடிக்கையால் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்!

இனி யாரும் வண்டி ஓசி கொடுக்க முடியாது! புதிய நடவடிக்கையால் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்!


traffic police using new technique for without helmet


சென்னை நகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக நகரம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சென்னை நகரம் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் பல வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

தற்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர்கள் கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

ஒரு சிலர் போக்குவரத்து போலீசார் நிற்பதை தூரத்தில் இருந்தே பார்த்துவிடுவதால் வேறு வழியாக சென்று விடுகிறார்கள். ஆனால் இனி மேல் இது போன்று போக்குவரத்து போலீசாரை யாரும் ஏமாற்ற முடியாது. நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். 

Helmet

இனிமேல் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படவுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, வாகன எண் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களது வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவர்களுக்கு தபால் மூலம் அபராத ரசீது அனுப்பப்படுகிறது.

அபராத தொகையை செலுத்த தவறினால் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் அடுத்தவர்கள் வாகனத்தை எடுத்துச்செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் வண்டியின் உரிமையாளருக்கே தண்டனை ஏற்படும் என நினைத்து யாருக்கும் வாகனம் ஓசி கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.