தமிழகம்

துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. நெஞ்சை உருக்கும் கொடூர விபத்து.. கரூர் அருகே நடந்த பயங்கரம்..

Summary:

கரூர் அருகே நள்ளிரவில் காரும், இரண்டு சுற்றுலா வேன்களும் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தநிலையில் 24 பேர் காயமடைந்தனர்.

கரூர் அருகே நள்ளிரவில் காரும், இரண்டு சுற்றுலா வேன்களும் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தநிலையில் 24 பேர் காயமடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீரங்கம் நோக்கி சுற்றுலா வேனில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கரூர் அடுத்த பவித்திர மேடு என்ற பகுதிக்கு நள்ளிரவில் வந்துள்ளது.

அப்போது எதிர்திசையில் கோவை நோக்கி வந்துகொண்டிருந்த டாடா சபாரி காரும், இவர்கள் சென்ற சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு சுற்றுலா வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 11 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தநிலையில் 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியநிலையில், கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணமென கூறப்படுகிறது.


Advertisement