தமிழகம்

டோல்கேட்டில் திடீரென கேட்ட அலறல் சத்தம்..! ஓட்டிச்சென்ற பாதுகாவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! சென்னையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்!..!

Summary:

Toll gate security killed at chennai

சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையில்  சுங்கச் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டும் பனி ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லாததால் கண்டெய்னர் லாரிகளை ஓட்டுனர்கள் இங்கு நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஓட்டுனர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், ஓட்டுனர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஓட்டுனர்களின் அலறல் சத்தம் கேட்டு சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த வெங்கடேசன்(50), அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளார்.

இந்த மோதலில் கொள்ளையர்கள் வெங்கடேசனை இரும்பு ராடால் தாக்கியதோடு, லாரி டிரைவர்களையும் தாக்கிவிட்டு பணம், செல்போன் முதலானவற்றை பறித்துகொண்டு ஓடிவிட்டனர். இதனை அடுத்து லாரி ஓட்டுனர்கள் மற்றும் வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, வெங்கடேசன் பரிதாபக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.


Advertisement