தமிழகம்

மக்களே மகிழ்ச்சியான செய்தி!! அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2000 ஆயிரம் பணம்!! எப்போதில் இருந்து தொடங்குகிறது தெரியுமா?

Summary:

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ. 2000 வழங்கும் திட்டம் வரும் மே 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ. 2000 வழங்கும் திட்டம் வரும் மே 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இந்நிலையில் திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் நேற்று முதல்வர் பொறுப்பேற்ற உடனே, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இதனை அடுத்து இந்த திட்டம் வரும் மே 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வரும் மே 10 ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ரூ. 2000 பணம்  வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


Advertisement