தமிழகம்

இன்று தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

Summary:

today rain in tamilnadu


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒருசில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்கவே தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.

இந்தநிலையில் சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வந்தது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சில இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழக தென் மாவட்டங்களிலும்ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 


Advertisement