தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த அதிரடி அறிவிப்பு... இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடல்!!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப ஒளி விழாவை முன்னிட்டு இன்று முதல் ஆறு நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு அப்பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து பத்து நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இவ்விழாவினை முன்னிட்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற 6 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிச்சாலை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களுடன் இணைந்த ஹோட்டல்களுக்கு இன்று முதல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளார்.
மேலும் திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகளும் இன்று முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.