தமிழகம் Covid-19

அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிதி.! கொரோனோவால் உயிர் இழந்தால் 1 கோடி..! திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.!

Summary:

TN Government should give 1 crore to family who died for corono DMK says

தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 கோடி தரவேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அணைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பேரழிவுகளை சந்தித்துவருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 1242 கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் திமுக தலைமையில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பச்சமுத்து உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டநிலையில், கொரோனோவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு 1 கோடி தரவேண்டும் எனவும், அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.5,000 சிறப்பு நிவாரண நிதி அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Advertisement