பூஜை போட்டு, பய பக்தியுடன் 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கியது பேருந்து போக்குவரத்து..! முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

பூஜை போட்டு, பய பக்தியுடன் 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கியது பேருந்து போக்குவரத்து..! முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!


TN Bus service resume from today

கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று தமிழகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஐந்து கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வில் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

corono

நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள் பேருந்துக்கு பூஜை செய்து, பய பக்தியுடன் பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பேருந்துகளில் நின்றுகொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்தில் பயணிக்கும் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.