கைப்புள்ள வடிவேல் போல, உடலில் எண்ணெய் தேய்த்து திருட்டு முயற்சி.. தர்ம அடி வாங்கிய திருடன்.!

கைப்புள்ள வடிவேல் போல, உடலில் எண்ணெய் தேய்த்து திருட்டு முயற்சி.. தர்ம அடி வாங்கிய திருடன்.!


Tiruvannamalai Othavadai Robbery Attempt Thief Captured by Peoples

திருடும் போது மாட்டிக் கொள்ளாமல் இருக்க உடல் முழுவதும் எண்ணெய்யை தேய்த்த நபர், அரைகுறை ஆடையுடன் திருடிச்சென்று பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒத்தவாடை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். மேலும், அரைகுறை ஆடையுடன் அவர் அப்பகுதியை சுற்றிவந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர். 

சுதாரித்துக்கொண்ட அக்கம்பக்கத்தினர் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு எண்ணெய் தேடித்து ஜட்டியுடன் சுற்றியவரை பிடித்து, கை, கால்களை கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Tiruvannamalai

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மேற்கொண்ட விசாரணையில், வேலூர் சேர்ந்த முனுசாமி என்பதும், ஏற்கனவே அவர் மீது திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. 

சம்பவத்தன்று ஒத்தவாடை தெரு பகுதியில் திருட செல்வதற்கு ஆயத்தமாக உடலில் எண்ணெய் தேய்த்து தயாராகி சென்ற நிலையில், பொது மக்களிடம் சிக்கி தர்ம அடிவாங்கி, காவல்துறையினர்வசம் சிக்கியதும் அம்பலமானது. முனுசாமியின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

வின்னர் திரைப்பட வடிவேல் காமெடி போல இந்த சம்பவம் நடந்துள்ளது.