தமிழகத்தை அதிரவைத்த பயங்கரம்.. குடும்பச்சண்டையில் 3 குழந்தைகளை கொன்ற தாய்., தற்கொலை முயற்சி..!

தமிழகத்தை அதிரவைத்த பயங்கரம்.. குடும்பச்சண்டையில் 3 குழந்தைகளை கொன்ற தாய்., தற்கொலை முயற்சி..!


Tiruvannamalai Mother Kills 3 Children She Suicide Attempt Failure

குடும்ப தகராறு காரணமாக மனதுடைந்த பெண்மணி தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சதாகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் பரசுராமன். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு இளவரசன், குறளரசன் என்ற 2 மகன்களும், யாஷினி என்ற மகள்களும் என 3 குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக தாய் அமுதா தனது இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை தென்பெண்ணை ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

Tiruvannamalai

பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைகள் மற்றும் அமுதாவை மீட்க முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், 3 குழந்தைகளும் உயிரிழந்த பின்னரே மீட்கப்பட்டனர். அமுதா மட்டும் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.  

இந்த விசயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் தாய் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.