களைப்புக்கு புரூட் மிக்ஸர் குடித்து பரிதாபம்.. 24 பேர் மருத்துவமனையில் அனுமதி..! ஆரணி அருகே சோகம்.!

களைப்புக்கு புரூட் மிக்ஸர் குடித்து பரிதாபம்.. 24 பேர் மருத்துவமனையில் அனுமதி..! ஆரணி அருகே சோகம்.!Tiruvannamalai Arani Fruit Mixer

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, மலையம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 24 பெண்கள் நடவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அவர்கள் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கத்தால் அனுபவிக்கும் கொடுமையை எண்ணி, உரிமையாளர் களம்பூரில் உள்ள ஜூஸ் கடையில் புரூட் மிக்ஸர் வாங்கி வந்து தந்துள்ளார். 

இந்த நிலையில், புரூட் மிக்ஸரை குடித்த 3 சிறார்கள் உட்பட 24 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, உறவினர்களால் மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், களம்பூர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.