தமிழகம்

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்ஸோவில் கைது.!

Summary:

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்ஸோவில் கைது.!

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருபவர் வினோத் (வயது 27). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. 

இந்நிலையில், இதே பகுதியில் 16 வயதாகும் சிறுமி, பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய வினோத், அவரை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் அவரிடம் விசாரிக்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement