தமிழகம்

பிள்ளைகளுடன் சென்ற பெற்றோர் விபத்தில் துடிதுடித்து பலியான சோகம்.. திருப்பூரில் பரிதாபம்.!

Summary:

பிள்ளைகளுடன் சென்ற பெற்றோர் விபத்தில் துடிதுடித்து பலியான சோகம்.. திருப்பூரில் பரிதாபம்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மனைவி பழனியம்மாள். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற 8 வயது மகனும், சரவணன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் செல்வம் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், இன்று காலையில் செல்வம் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, சுல்தான்பேட்டை பகுதியில் செல்கையில், இருசக்கர வாகனம் லாரி மீது மோதி உள்ளது. 

இந்த விபத்தில், இருசக்கர வாகனம் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்த நிலையில், பலத்த காயமடைந்த செல்வம் மற்றும் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து பொதுமக்கள் மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சஞ்சய், சரவணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மங்கலம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்த நிலையில், விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement