திருப்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரம்.. மராட்டிய ஆர்.பி.எப் உதவியுடன் கைதான கொள்ளையர்கள்.!

திருப்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரம்.. மராட்டிய ஆர்.பி.எப் உதவியுடன் கைதான கொள்ளையர்கள்.!



Tiruppur Gold Jewelry Robbery Case Maharashtra RPF Officers Arrest Culprits

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புத்துராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). இவர் கே.பி. என் காலனியில் நகைக்கடை வைத்துள்ளார். அடகு, மாதசீட்டு போன்றவையும் இங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொள்ளையர்கள் கடையின் கதவை உடைத்து 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.14.50 இலட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருப்பூர் மாநகர காவல் துறையினர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடையில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தபோது, அதில் முகக்கவசம் அணிந்து வந்த 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. 

இவர்கள் எங்கு செல்கிறார்கள்? என்ற கண்காணிப்பின் போது மகாராஷ்டிரா செல்வது உறுதியாகவே, மகாராஷ்டிரா மாநில இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 கொள்ளையர்களின் உருவத்தையும் அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் நாக்பூர் பலர்சா பகுதியில் செல்லும் போது, இரயில்வே காவல் துறையினர் இரயிலில் சோதனை செய்துள்ளனர். 

Tiruppur

இதனையடுத்து, இரயிலில் பயணம் செய்த 4 கொள்ளையர்களையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து, திருப்பூர் தனிப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சென்ற திருப்பூர் காவல் துறையினர், கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இவர்கள் பீகார் மாநிலத்தை செய்தவர்கள் என்பது உறுதியானது. 

மஹதாப் ஆலம் (வயது 26), பத்ரூல் (வயது 27), திலாகாஸ் (வயது 20), முகமது சஹான் (வயது 30) ஆகியயோர் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, நகைக்கடையை திட்டம்போட்டு கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரூ.14 இலட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.