வணிகர் சங்க போராட்ட அழைப்பில் லடாய்.. சட்டையை கிழித்து சண்டையிட்ட இருதரப்பு..!

வணிகர் சங்க போராட்ட அழைப்பில் லடாய்.. சட்டையை கிழித்து சண்டையிட்ட இருதரப்பு..!


Tirupattur 2 Gang Fight

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரில், வணிகர் சங்க பேரவை சார்பாக கடையடைப்பு தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது, திடீரென இருதரப்பாக பிரிந்து பேரவையினர் மோதலில் ஈடுபட்டனர். 

6 ஆம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் கடையடைப்பு எதுவும் கிடையாது என கூறியுள்ளனர். 

இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நடக்கவே, 6 பேர் காயம் அடைந்தனர். மேலும், சண்டையில் ஈடுபட்டோரின் சட்டைகள் கிழிக்கப்பட்டது.