வாகன நிறுத்துமிடமா? உல்லாச உலகின் நுழைவு வாயிலா?.. நெல்லை பேருந்து நிலையத்தில் ஒரு காமத்திபுரா?..! 

வாகன நிறுத்துமிடமா? உல்லாச உலகின் நுழைவு வாயிலா?.. நெல்லை பேருந்து நிலையத்தில் ஒரு காமத்திபுரா?..! 



Tirunelveli New Bus Stand Vehicle Shelter Now Turned as Prostitution Park 

 

திருநெல்வேலி நகரில் அமையப்பெற்ற புதிய பேருந்து நிலையம், சமீபத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. இதனால் பிரத்தியேக கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் புதுப்பொலிவு பெற்று இருக்கிறது. 

இந்நிலையில், பேருந்து நிலையத்தின் பயன்படுத்தப்படாத பகுதிகளில் இரவு நேரங்களில் திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள், வாடிக்கையாளர்களை திருட்டுத்தனமாக அழைத்து வந்து அவ்விடங்களில் உல்லாசமாக இருக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

இதனை அப்பட்டமாக உறுதி செய்யும் வகையில், பயன்படுத்தப்படாத வாகன நிறுத்துமிடத்தில் ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டு கிடைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இந்த விஷயம் குறித்து உரிய விசாரணை நடத்தி, விபச்சாரம் போன்றவை தடுக்கப்படுவது மட்டுமல்லாது, பிற அசம்பாவிதங்களையும் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.