வித்தியாசமாக டிக் டாக் வீடியோ செய்ய முயற்சித்த இளைஞர்! சம்பவ இடத்திலேயே பலி.! பதறவைக்கும் வீடியோ!tik tak man died

தற்போது நாடு முழுவதும் டிக் டாக் வீடியோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும்  டிக் டாக் வீடியோவால் ஏற்படும் அசம்பாவிதங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் நடந்தது, இதனையடுத்து சில விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் அந்த செயலி செயல்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் இன்று டிக் டாக் வீடியோ செய்யும்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகவும் டிரெண்டாகிய ''புள்ளீங்கோ'' என்ற பாடல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இந்த புள்ளீங்கோ பாடலுக்கு பலரும்  டிக் டாக் வீடியோ செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு  வீடியோவில் அதேபோன்று வாலிபர் ஒருவர் பைக்கின் மீது ஏறி நின்று பின் பக்கமாக பல்டி அடிக்க முதற்சி செய்துள்ளார். அப்போது தவறுதலாக அவரின் தலை தரைக்கு நேராக மோதி, பலத்த அடிபட்டு கீழே விழுந்துள்ளார். அவரை உடனிருந்த நண்பர்கள் தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. தயவு செய்து இதுபோன்று யாரும் முயற்சிக்காதீர்கள்.