பிரான்ஸ் வாலிபர்களை மணந்த மூன்று சகோதரிகள்.. திருச்செந்தூரில் திருமணத்தை நடத்தியபெற்றோர்..!

பிரான்ஸ் வாலிபர்களை மணந்த மூன்று சகோதரிகள்.. திருச்செந்தூரில் திருமணத்தை நடத்தியபெற்றோர்..!Three sisters who married French youths.. The parents conducted the wedding in Tiruchendur..

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்கா,தங்கைகள் மூன்று பேரை மணந்த பிரான்ஸ் வாலிபர்கள்.

திருச்செந்தூர், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மாசிலாமணி, ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர். பிரான்ஸில் மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். 

மூன்று பேரும் பிரான்சில் படித்து, அங்கேயே வேலை செய்து வருகின்றனர். மூன்று பேரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர்களை காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் மாசிலாமணி குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை, மேலும் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதை தொடர்ந்து நேற்று மாசிலாமணி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் வந்து, அவர்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ ஆகிய மூவருக்கும், திருச்செந்தூர் கோவிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி  திருமணம் செய்து வைத்தனர். மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.