தமிழகம்

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

three people suicide in home

சென்னை வியாசர்பாடி அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கரிகாலன். மீன் வியாபாரம் செய்து வந்த இவரது மனைவி பெயர் முனியம்மாள். முனியம்மாளின் அண்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் என்பவரும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

கரிகாலனுக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகனும் குணவதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு, மகள் குணவதியின் திருமணத்திற்காக கரிகாலன் வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மகளின் திருமணத்திற்கு பிறகு கரிகாலனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனால் தனது வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார்.

இதற்கு கரிகாலனின் மகன் ஹரிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தந்தையுடன் கோபித்துக் கொண்டு ஹரிகிருஷ்ணன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு தனியாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன் கரிகாலன் வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை காலி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் கரிகாலன் , அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விஷம் அருந்திய ஆறுமுகம் வீட்டின் ஹாலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்கலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement