தமிழகம்

பகலில் பத்தியக்காரன் வேடம், இரவில் சைக்கோ! பெண்கள் முதல் ஆண்களை வரை ரேப்! நடுங்க வைக்கும் சீரியல் கில்லர்!

Summary:

Thoothukudi phyco man killed 6 years old boy

தூத்துக்குடி மாவட்டம் முதலாபுரம் பகுதியை சேர்ந்தவன் அருள்ராஜ். வீதியை சுற்றிவருவது, பைத்தியக்காரன் போல் நடந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதால் இவன் ஒரு பைத்தியம் என நினைத்து மக்கள் அவனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த பகுதியில் சமீபத்தில் நடந்த ஊராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த வேட்பாப்பாளர் ஒருவரின் உறவினரின் 6 வயது மகனை காணவில்லை என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அந்த சிறுவனை பைத்தியமாக திரியும் அருள்ராஜ்தான் கடைசியாக அழைத்து சென்றதாக தெரியவந்தது. இதனை அடுத்து அருள்ராஜை விசாரித்ததில் ஆமா, நான்தான் அவனை கொலை செய்தேன், உடலை இங்குதான் போட்டுவைத்துளேன் என சொன்னதையே திரும்ப திரும்ப கூறியுள்ளான்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவன் கூறிய இடத்தில் பார்த்தபோது அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தான். சிறுவனனின் பிரேத பரிசோதனையில் அவன் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனால் அருள்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து அவன் பைத்தியம் இல்லை, பைத்தியம்போல் நடித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். அவனை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement