தமிழகம்

நெஞ்சை பதறவைக்கும் விபத்து.. சிறிய ரக லோடு வாகனம் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..

Summary:

சிறிய ரக லோடு வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்த

சிறிய ரக லோடு வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணப்படை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் சிறிய ரக லோடு ஆட்டோவில் ஏறி, கூலி வேலை செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மணியாச்சி என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தநிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.


Advertisement