நாங்க இலஞ்ச ஒழிப்புத்துறை., சோதனைக்கு அனுமதி தாங்க.. வாயால் கெட்ட கேடி ஆண்டிஸ்..!Thoothukudi Fraud Girls Arrested by Police

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள நகை கடைக்கு இன்று வருகை தந்த இரண்டு பெண்கள், தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடையை அதிரடியாக சோதனை செய்ய வேண்டும் என்று கேட்கவே, இருவரின் மீதும் சந்தேகம் அடைந்த உரிமையாளர் அவர்களிடம் பேசிக் கொடுத்தவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை செய்ததில், அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிடையாது என்பதும், ஏரலைச் சார்ந்த பாபி ராமலட்சுமி, ராஜலட்சுமி மற்றும் பரமேஸ்வரி என்பது உறுதியானது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.