தென்மாவட்டத்தில் ஆணவக்கொலை... காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி, பெண்ணின் தந்தையால் படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி..!

தென்மாவட்டத்தில் ஆணவக்கொலை... காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி, பெண்ணின் தந்தையால் படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி..!


thoothukudi-ettayapuram-love-couple-killed-by-father-q6

எட்டயபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, பெண்ணின் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், வீரப்பட்டி ஆர்.சி. தெரு சேவியர் காலனியில் வசித்து வருபவர் முத்துக்குட்டி (வயது 50). இவரின் மகள் ரேஷ்மா (வயது 20). ரேஷ்மா கோவில்பட்டியில் இருக்கும் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

இதே பகுதியில் வசித்து வரும் ரேஷ்மாவின் உறவினர் வடிவேல். வடிவேலின் மகன் மாணிக்கராஜ் (வயது 26). ரேஷ்மாவும் - மாணிக்கராஜும் காதலித்து வந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் முத்துகுட்டிக்கு தெரியவந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அவர் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளார். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் ஊர் திரும்பியுள்ளது. 

Thoothukudi

காதல் ஜோடியை கண்ட ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று புதுமண காதல் திருமண ஜோடி வீட்டில் இருந்த சமயத்தி அங்கு முத்துக்குட்டி வருகை தந்துள்ளார். காதல் ஜோடி சற்றும் எதிர்பாராத நேரத்தில் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்து கொலை செய்து தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக எட்டயபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகுட்டியை தேடி வருகின்றனர்.