40 வயது பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் : கட்டை ரௌடிக்கு கையில் மனிதாபிமான மாவுக்கட்டு.. தூத்துக்குடியில் சம்பவம்.!

40 வயது பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் : கட்டை ரௌடிக்கு கையில் மனிதாபிமான மாவுக்கட்டு.. தூத்துக்குடியில் சம்பவம்.!


thoothukudi-40-aged-girl-rape

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பெண் ரௌடியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், காமுகன் கையில் மாவுக்கட்டு போடப்பட்டது. கட்டை என்ற அடைமொழியை கொண்ட அல்லக்கையின் கையில் மாவு வைத்து கட்டு போடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண்மணி, கடந்த 14 ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இவர் தனியாக சென்று கொண்டு இருந்த நிலையில், அவரை சுத்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த ரௌடி கட்டை முருகன், கூட்டாளி கோகுலராம் ஆகியோர் இடைமறித்துள்ளனர். 

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கத்தி முனையில் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலையில் பெண்ணை இருசக்கர வாகனத்தில் வீட்டருகே விட்டுவிட்டு மிரட்டி சென்றுள்ளான். இதனால் செய்வதறியாது திகைத்த பெண்மணி கலங்கியிருந்துள்ளார். 

இதனையடுத்து, கட்டை முருகனின் கூட்டாளியான கோகுலராம் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு அழைக்கவே, பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயவன் வீடுபுகுந்து கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறான். ரௌடிகளான இருவரும் தன்னை கொலை செய்தாலும் செய்வார்கள் என்ற பயம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

Thoothukudi

இந்த விஷயம் தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரௌடி கட்டை முருகன், கூட்டாளி கோகுல்ராம் ஆகியோரை தனிப்படை அமைத்து கைது செய்தனர். இதற்கிடையில், தாளமுத்து நகர் பகுதியில் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர். 

அப்போது, இவர்களின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், கட்டை முருகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.