காரில் வேகமாக சென்றதால் தகராறு.. கல்லூரி மாணவர்களை கடத்திய கும்பல்..! தூத்துக்குடியில் துணிகரம்.!!

காரில் வேகமாக சென்றதால் தகராறு.. கல்லூரி மாணவர்களை கடத்திய கும்பல்..! தூத்துக்குடியில் துணிகரம்.!!Thoothukudi 2 College Students Kidnapped by 3 Man Gang Police Arrested

கார் வேகமாக வீதியில் சென்ற தகராறில் 3 பேர் இரண்டு வாலிபர்களை கடத்திய பரபரப்பு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் டவுன் பகுதியை சார்ந்த தாமஸ். இவரது மகன் இன்பெண்ட் ராஜா (வயது 25). எஸ்.எம் புரம் பகுதியை சார்ந்தவர் மணிராஜ் (வயது 25). இவர்கள் இருவரும் கல்லூரியில் டிப்ளோமா 3 ஆம் வருடம் பயின்று வந்துள்ளனர். நேற்று முன்தினத்தின் போது இருவரும் காரில் எஸ்.எம் புரத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, காரில் வேகமாக சென்ற நிலையில், காரை அப்பகுதியை சார்ந்த 3 வாலிபர்கள் இடைமறித்து நிறுத்தி இருக்கின்றனர். 

காரில் வந்த 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்ட நிலையில், இதன்போது கைகலப்பு ஏற்பட்டு இன்பெண்ட் ராஜா கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று மணிராஜின் வீட்டிற்கு முன்புறம் 2 பேர் நின்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களும் வந்து இன்பெண்ட் ராஜின் காரில் 2 பேரையும் கடத்தி சென்றுள்ளனர். 

Thoothukudi

காரின் கதவை திறந்து இன்பெண்ட் ராஜ் கீழே குதித்து தப்பிக்கவே, அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மணிராஜுடன் கார் சென்ற நிலையில், மில்லர்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு காரை விட்டு கடத்தலில் ஈடுபட்ட 3 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

இன்பெண்ட் ராஜ் தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எஸ்.எம் புரத்தை சார்ந்த விஜயகுமார் (வயது 23), விக்னேஷ் (வயது 26), அஜித் (வயது 25) ஆகிய 3 பேர் கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்து, மூவரையும் கைது செய்தனர்.