தமிழகம்

ஆசையாக சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய சிக்கன்.. பின் நிகழ்ந்த சோகம்.!

Summary:

Thondaiyil sikiya chicken thundu, pin nikilntha sogam

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் -பிங்கி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற சிறுவன் உள்ளான். இந்நிலையில் நேற்று இரவு பிங்கி இரவு உணவிற்கு சிக்கன் சமைத்துள்ளார். அதனை ஆசையாக சிறுவன் லோகேஷ் சாப்பிட்டுளளான்.

லோகேஷ் சாப்பிட்ட சிறுது நேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டுள்ளது. உடனே சிறுவனை அழைத்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு உள்ள மருத்துவர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதனையடுத்து சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். மேலும் சிறுவன் சாப்பிட்ட சிக்கன் துண்டானது தொண்டையில் சிக்கி கொண்டதால் தான் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

இத்தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரனை செய்ததில் லோகேஷ், பிங்கியின் முதல் கணவரது மகன் என்பது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் பிங்கியை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement