அந்த நாய் மட்டும் குறுக்க வரலனா இப்படி நடந்திருக்காது.. கடலூரில் சோகம்..!



This would not have happened if only that dog had come across.. Tragedy in Cuddalore..!

கடலூரில் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஒன்று நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு தந்தை பெரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு செல்வதற்காக அங்கு வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவானது கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று குறுக்கே ஒரு நாய் வந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர் சுதாரித்துக் கொள்வதற்குள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

accident

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றுக்கொண்டு சென்றதும் விபத்திற்கு காரணமாக அமைந்தது இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.