ரூ.1000 கிடைக்காது... இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!



this-listed-people-will-not-receive-women-entitlement-a

தமிழக அரசு  குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது அதற்கான தகுதிகளை  அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படியே ஐந்து ஏக்கர் நிலம் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என தெரிவித்து இருக்கிறது. மேலும் அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கும் பெண் எம் எல் ஏ மற்றும் பெண் எம் பிக்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. 

tamilnadu

மேலும் எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அங்கே சென்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளின் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயது  பூர்த்தியாகி  இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

மேலும் இந்தத் தொகையை பெறுவதற்கு உச்சபட்ச வயது என்று எதுவும் இல்லை. 21 வயது பூர்த்தியாகி மற்றும் அதற்கு மேல் உள்ள எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் இது பொருந்தும். இந்த அறிவிப்புகளின் மூலம் மகளிர் உரிமை தொகை விரைவிலேயே  மக்களுக்கு கிடைக்கும் என்ற மகிழ்ச்சி  மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.