பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..? தனி அறையில் தீவிர கண்காணிப்பு..!

பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..? தனி அறையில் தீவிர கண்காணிப்பு..!


thiruvarur-parotta-master-suspected-corono-virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பாம்பு சூப்பில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 400 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவிலும் இந்த நோய் கேரளாவில் இதுவரை மூன்று பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து திருவாரூர் அடுத்து நீடாமங்களம் வந்த புரோட்டோ மாஸ்டர் உடல் நலக் குறைவால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

corono

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா என ரத்தப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு வந்த பிறகே அவருக்கு கொரோனா தோற்று உள்ளதா இல்லையா என உறுதியாக கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது உடல் நிலை சீராக உள்ளது என்றும், இன்னும் 30 நாட்களுக்குக் கூடுதல் கண்கானிப்பில் இருப்பார்  என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.