கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
குடிகார தகப்பனால் சோகம்.. குழந்தைக்கு விஷம் ஊற்றி கொலை, தானும் குடித்து தற்கொலை முயற்சி.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் வசித்து வருபவர் கோபால். இவரின் மனைவி வீரம்மாள். தம்பதிகளுக்கு 6 வயது மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் கோபால், அனுதினம் மதுபானம் அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
மேலும், போதையில் மனைவியை மாட்டு கொட்டகையில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனைக்கண்ட அப்பகுதிமக்கள் வீரம்மாளை மீட்டு இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வீரம்மாள் முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் தம்பதியிடையே சமாதானம் பேசி, கோபாலை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் பம்மிய கோபால் வீட்டிற்க்கு வந்ததும் எதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்தாய்? என மனைவியை தாக்கியுள்ளார். இதனால் வீரம்மாள் இரவில் பள்ளிக்கூடத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். பின்னர், காலையில் வீட்டிற்கு வந்து வீரம்மாள் பார்க்கையில் கணவர் விஷமருந்திய நிலையில் உயிரற்று இருப்பதையும், குழந்தை வாயில் நுரைதள்ளி இருப்பதையும் கண்டு கதறியுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரும் உயிருடன் இருக்கலாம் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் மருத்துவமனையில் அனுமதிக்க, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கோபால் உயிர்பிழைக்க, 6 வயது பச்சிளம் குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.