பெண்கள் பிரச்சனையில் சிக்கி குடும்பத்தை தலைகுனிய வைத்த தம்பி.. தவறிழைத்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்.!

பெண்கள் பிரச்சனையில் சிக்கி குடும்பத்தை தலைகுனிய வைத்த தம்பி.. தவறிழைத்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்.!


Thiruvarur Brother Murder his Elder Brother He Disgrace Family Name about woman Case

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் கிராமம், சிவராமன் காலனியில் வசித்து வருபவர் தங்கராசு. இவரின் மகன்கள் ஐயப்பன் (வயது 26), அருண் குமார் (வயது 22). அருண் குமார் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில், சமீபத்தில் ஊருக்கு வந்த அருண்குமாருக்கும், அவரது சகோதரர் ஐயப்பனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. மதுபோதையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஐயப்பன் தனது தம்பியான அருண் குமாரை கடப்பாரையால் குத்தி கொலை செய்துள்ளார். 

thiruvarur

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பெண்கள் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அருண், விடுமுறைக்கு ஊருக்கு வரும் நேரங்களில் பெண்கள் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இந்த சர்ச்சை தொடர்கதையாக, அவரின் குடும்பத்தினருக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அருண் குமாரை கண்டித்து இருக்கின்றனர். 

ஆனாலும், அதனை கேட்காமல் அருண் குமார் பெண்கள் விவகாரத்தில் சிக்கியபடி இருந்த நிலையில், சம்பவத்தன்று நடந்த தகராறில் ஐயப்பன் அருண் குமாரை குத்தி கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குடவாசல் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.