வடமாநில குடியிருப்பில் புகுந்து உள்ளூர் ஆசாமிகள் அட்டகாசம்; 6 பேர் கைது., 2 பேருக்கு மாவுக்கட்டு.!Thiruvallur Vellavedu Cops Arrested 6 Persons 


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில், வடமாநிலத்தை சேர்ந்தவர் தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருந்தவாறு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களின் குடியிருப்புக்குள் கத்தி உட்பட பயங்கர ஆயுதத்துடன் நுழைந்த 6 பேர் கும்பல், அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டன. 

இதன்பேரில் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த வேலு, லோகேஷ், சரத் குமார் உட்பட 6 பேர் கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டது. காவல் துறையினர் கைது செய்யும் முயற்சியின்போது தப்பிச்செல்ல முயன்ற வேலு மற்றும் சரத்குமார் ஆகியோர் கீழே விழுந்து கால் எலும்புகளை முறித்துக்கொண்டதால், தற்போது மாவுக்கட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.