ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் இன்று முதல் ரூ.50-ஆக உயர்வு.!Thirupur train platform ticket price increased

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் தினமும் பலர் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், தசமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வந்து கொண்டிருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ரயில் நிலையத்திற்கு பயணம் செய்பவர்களை விட அவர்களை வழியனுப்புவதற்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இதனால் பயணம் செய்பவர்களை விட வழியனுப்ப வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் தற்போது ரூ.15-ஆக இருந்ததை இன்று முதல் கட்டணம் மேலும் ரூ.35 உயர்த்தப்பட்டு, ரூ.50 ஆக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.