கொரோனா.!தொல். திருமாவளவன் சகோதரி மரணம்! டிடிவி தினகரன் இரங்கல்!

கொரோனா.!தொல். திருமாவளவன் சகோதரி மரணம்! டிடிவி தினகரன் இரங்கல்!


Thirumavalavan sister died

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி.பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். அன்னாரை இழந்து வாடும் சகோதரர் திரு.திருமாவளவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.