தெப்ப தேரோட்டத்தின்போது பட்டாசு வெடித்து தீவிபத்து... 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெறித்து ஓட்டம்..! 

தெப்ப தேரோட்டத்தின்போது பட்டாசு வெடித்து தீவிபத்து... 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெறித்து ஓட்டம்..! 


thenkasi temple fire accident

தெப்ப தேரோட்டத்தின் போது அலங்கார பந்தல் மீது பட்டாசு வெடித்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் 10ஆம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவின் போது, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்பதோராட்டம் நடைபெற இருந்த நிலையில், தேரோட்டத்தை காண சுமார் 2000க்கும்  மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் குவிந்தனர். 

thenkasi

இரவு 09:30 மணியளவில் கோவிலின் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது, பரவிய தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்து அலங்காரபந்தல் முழுவதுமாக எரிந்துபோனது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்குமிங்கும் ஓடிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.