விடிந்தால் திருமணம்..! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.! மச்சான் செய்த விபரீத செயல், கதறும் குடும்பத்தினர்!

விடிந்தால் திருமணம்..! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.! மச்சான் செய்த விபரீத செயல், கதறும் குடும்பத்தினர்!


Thenkasi

தென்காசியில் உள்ள தென்மலை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் அதே பகுதியில் ஜேசிபி ஆப்பரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திடீரென முனியப்பனின் சகோதரியான முனீஸ்வரியின் கணவர் சங்கிலி முருகன் தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை ஒழுங்காக கிடைக்கவில்லை என இரவில் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். 

thenkasi

இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மச்சான் என்று கூட பாராமல் சங்கிலி முருகனை அடித்துள்ளார். அதன் பிறகு விடிந்தால் திருமணம் என்பதற்காக அனைவரும் தூங்க சென்று விட்டனர். ஆனால் கோபமான சங்கிலி முருகன் மீண்டும் சென்று நன்கு குடித்து விட்டு வந்து தூங்கி கொண்டிருந்த புதுமாப்பிள்ளையின் கழுத்தை அறுந்துள்ளார். 

மாப்பிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி சென்று பார்த்த போது முனியப்பன் இரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்துள்ளார். உறவினர்கள் சங்கிலி முருகனை பிடிக்க முயன்றும் அது முடியாமல் போனது. விடிந்தால் மாப்பிள்ளையாக பார்க்க வேண்டிய முனியப்பன் இறந்து கிடப்பதை பார்த்த குடும்பத்தினர் கதறி துடித்த சோகம் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.